2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து அவதானம்

2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து அவதானம்

2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, சுற்றாடல், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் ஆகிய அமைச்சுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு தனித்தனியாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

manel