118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம்
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் ஏழாந்திகதி இரண்டாவது வாசிப்பு மீதான உரையை நிகழ்த்தினார்.
கடந்த எட்டாந்திகதி முதல் இரண்டாவது வாசிப்பு மீது விவாதம் நடைபெற்று இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின்போது எண்மர் வாக்களிக்காமல் தவிர்த்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களான மனோ கணேசன, வீ. ராதாகிருஷ்ணன், பீ. திகாம்பரம் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆரரவாக வாக்களித்தனர்.

