நான் ஒரு சொல் சொன்னால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் – டிரம்ப்
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் அமுல்படுத்த தவறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் கூறுகையில் , “நான் ஒரு வார்த்தை சொன்னால் இப்போது இஸ்ரேல், காஸாவின் தெருக்களுக்குத் திரும்பும். இஸ்ரேல் இராணுவத்தினர், காஸா உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
ஹமாஸில் என்ன நடக்கிறதோ அது விரைவில் சரி செய்யப்படும். அவர்கள் ஆயுதங்களை கீழிறக்கவில்லை எனில் நாங்கள் இறக்க வைப்போம். அது மிகவும் மோசமாகவும் விரைவாகவும் நடக்கும்” என்று கூறியுள்ளார்.
ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளின் சடலங்களையும் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இறந்த உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கூடுதல் நேரம் வேண்டும் என்றும் ஹமாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

