கொழும்பில் இன்று நீர் வெட்டு
இன்று (20) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு, கொழும்பு 01 முதல் 15 வரை கொழும்பில் நீர்விநியோகம் நிறுத்தப்படும்.
பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.:

