கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று இனம்காணப்பட்டுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று (06) காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

