ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோ ஹெரோயின் மீட்பு

ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோ  ஹெரோயின் மீட்பு

தெற்கு கடற்பரப்பில் 16 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட மற்றொரு ஆழ்கடல் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோ கிராம் ஹெரோயின் கடற்படை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தெற்கு கடற்பரப்பில் வைத்து அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு வெள்ளிக்கிழமை (17) காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது மீன்பிடி படகிலிருந்து 53 கிலோ கிராம் ஹெரோயின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய தெற்கு ஆழ்கடலில் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்