ஹொங்கொங் தீவிபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹொங்கொங் தீவிபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹாங்காங்கில் உயரமான கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீக்குப் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 94க்கு அதிகரித்துள்ளது.

குறைந்தது 76 பேர் காயமுற்றதாக தீயணைப்புச் சேவைப் பிரிவு வெளியிட்ட ஆக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம், ஹாங்காங்கில் பல ஆண்டுகளில் காணப்படாத ஆக மோசமான தீச்சம்பவமாகும்.

24 மணிநேரத்துக்கும் மேலாக எரிந்துகொண்டிருந்த தீ கிட்டத்தட்ட முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் இருக்கும் டாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் வீடமைப்புக் கட்டடத்தில் இந்தத் தீ மூண்டது. சம்பவத்தில் பலரை இன்னும் காணவில்லை.

எஸ். ரஜீவன்