ஹப்புகஸ்தன்னை யுவதி மரணம்: சந்தேக நபர் கைது

ஹப்புகஸ்தன்னை யுவதி மரணம்: சந்தேக நபர் கைது

இரத்தினபுரி அப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்கை பிரிவில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று இரத்தினபுரியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அடைக்கலமாகச் சென்றிருந்தபோது அவர் பொலிஜில் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்கை பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி எனன்ற 20 வயது யுவதி நேற்று முன்தினம் நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் பஸ்ஸிலிருந்து வீடு செல்லும் வழியில் இறந்துகிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ். ரஜீவன்