விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் ஆறு மாதத்தில் கைது

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் ஆறு மாதத்தில் கைது

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக சந்தேக நபர் ஒருவர் ஆறு மாதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விருந்துபசாரத்தின்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்தார்.

இந்தக் குற்றம் 2025.04.29 அன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் நேற்று (30) ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் குற்றம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதன்படி, குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவால், இந்தக் குற்றத்தின் சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய மற்றும் தப்பிச் செல்வதற்கு உதவிய சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு, ஹிரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் 40 வயதுடைய மொறவின்ன, பாணந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

எஸ். ரஜீவன்