மெட்ரோ பஸ் சேவையில் 112 புதிய பஸ்கள் இணைப்பு!

மெட்ரோ பஸ் சேவையில் 112 புதிய பஸ்கள் இணைப்பு!
  • கொழும்பு நகர போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை வழங்க நடவடிக்கை

கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தின் 7 வழித்தடங்களில் 112 புதிய மெட்ரோ பஸ் பஸ்கள் இன்று (29) முதல் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் நடைபெற்றது.

நவீன மெட்ரோ பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்டதுடன், வசதியான தாழ்தள பஸ்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன் கீழ் இலங்கைக்கு கிடைத்த 104 பஸ்களும், ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 8 பஸ்களும் இன்று முதல் பயணிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது இலக்குகளை வசதியாகவும் பாதுகாப்பாகவும் சென்றடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டம், நாட்டின் பொதுப் போக்குவரத்து துறையில் புதிய கட்டத்தை உருவாக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

manel