மாவனெல்ல கந்த பகுதியில் மண்சரிவு – நால்வர் மாயம்
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல கோவில் கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 20 வீடுகள் மண்சரிவால் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியிலுள்ள பல குடும்பங்கள் அவசரகால தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், மழை தொடரும் நிலையில் மக்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

