மாலபே Crescendo அடுக்குமாடிவீட்டுத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் துரிதம்
நாட்டின் நடுத்தர வருமானம் பெறும் மக்களின் வீடமைப்புச் சவால்களுக்குத் தீர்வளிக்கும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) கடுவலை – மாலபே “இரண்டாம் கொழும்பு” பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் Crescendo அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக இடம்பெற்று வருகின்றன.
இக் குடியிருப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தியடைந்துள்ளதை அடுத்து, நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வீடுகளைக் குடியிருப்பாளர்களிடம் கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
20 மாடிகளைக் கொண்ட இக் கட்டடத் தொகுதியில் மொத்தமாக 256 நவீன வீட்டு அலகுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

