மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

காணியின் ஒருபகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் இப்பகுதியில் நபரொருவர் உயிரிழந்து பல நாட்கள் ஆகியுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றுமுன்தினம் (06) மாலை அப்பகுதிக்கு சென்ற நபரொருவர் இதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார் அவ்விடத்தை குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் மண்டையோடு மற்றும் எலும்புகள், சிறுதொகை பணம், நஞ்சு மருந்துகள், ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்

எஸ். ரஜீவன்