மர்ஹும் நுஸ்தி வெற்றி கிண்ணத்தை 2004 சுனாமி அணி தனதாக்கியது!
2019 அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மர்ஹும் ஏ.என்.நுஸ்தி அஹமட் வெற்றி கிண்ணம் -2026” ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 2004 பழைய மாணவர் அணி (சுனாமி அணி) வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
அந்-நூர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற பழைய மாணவர்கள் கொண்ட 16 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப் போட்டி, அணிக்கு 8 பேர் கொண்ட, 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டியின் மற்றும் இறுதிச் சுற்றுக்கு 2004 பழைய மாணவர்கள் அணியினரும் (சுனாமி அணி), 2018 பழைய மாணவர்கள் அணியினரும் தெரிவானது.
இந்த இறுதிப் போட்டி நேற்று (17) மாலை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில், குறித்த பாடசாலையின் அதிபர் என்.கே.எம்.மிஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற 2018 பழைய மாணவர்கள் அணியினர், 2004 பழைய மாணவர்கள் அணியினரை முதலில் துடுப்பாடும்படி கேட்டுக்கொண்டனர். குறித்த அணியினர் 5 ஓவர் நிறைவில் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி துப்பாடிய 2018 பழைய மாணவர் அணியினர் 5 ஓவர் நிறைவில் 31 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. இதில் பழைய மாணவர்கள் (சுனாமி அணி) வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தையும், பணம் பரிசிலையும் தனதாக்கிக் கொண்டது.
சிறந்த களத்தடுப்பாளராக முஹம்மது கியாஸும், சிறந்த பந்துவீச்சாளராக முஹம்மது ஹலீமும், சிறந்த விக்கெட் காப்பாளராக முஹம்மது நஜிஹரும், சிறந்த அணித் தலைவராக முஹம்மது மபாவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக முஹம்மது றிபாவும் தெரிவாகினர்.
இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட NEST Inter National Pvt (Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியாளர் எம்.என்.சப்னாஸினால், 2004 பழைய மாணவர்கள் அணியினரின் சம்பியன் கிண்ணத்தையும், பணப்பரிசையும் வழங்கி வைத்தார்.
இரண்டாமிடம் பெற்ற 2018 அணியினரின் கிண்ணம் மற்றும் பணப்பரிசை நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் வழங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட 2018 பழைய மாணவர்கள் அணி இம்முறை இரண்டாமிடம் பெற்றதும், இரண்டு முறை தொடர்ந்து சம்பியன் கிண்ணத்தை தவறவிட்ட 2004 சுனாமி அணியினர் இம்முறை சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

