போதைப்பொருளுடன் சிக்கிய படகு தங்காலை துறைமுகத்திற்கு

போதைப்பொருளுடன் சிக்கிய படகு தங்காலை துறைமுகத்திற்கு

கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மற்றும் 2 T-56 ரக துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள் இருந்ததாகவும் பாதுகாப்புத் பிரிவினர் தெரிவித்தனர்.

எஸ். ரஜீவன்