பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; பெண்ணுக்கு விளக்கமறியல்!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; பெண்ணுக்கு விளக்கமறியல்!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரான அந்தப் பெண் காரை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர். 

எனினும் அந்தப் பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. 

எனினும், பொலிஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

எஸ். ரஜீவன்