பாடசாலை மாணவர்களுக்கு ஜீவன், நாமல் இணைந்து நிவாரணம்

பாடசாலை மாணவர்களுக்கு ஜீவன், நாமல் இணைந்து நிவாரணம்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் அடங்கிய பாடசாலை உபகரண நிவாரன பொதி வழங்கி வைக்கப்பட்டது.

கொட்டகலை–லொக்கில் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, அப்பியாச புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய நிவாரண பொதிகள் நேற்று (08) வழங்கி வைக்கப்பட்டது.

எனது வேண்டுகோளுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் “Adare – ஆதரே” நிவாரண திட்டத்தின் மூலம் 8,000 அப்பியாச புத்தகங்கள் கிடைக்கப்பெற்றது.

இந்த பெரும் ஆதரவின் ஒரு பகுதியாக, கொட்டகலை–லொக்கில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அனர்த்தத்திற்கு உள்ளானர்களுடன் தமது வீடுகளுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம்.

இந்த முயற்சியில் என்னுடன பாராளுமன்ற உறுப்பிர்களான நாமல் ராஜபக்ச, டி.வி. சானக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸ,
கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாந்த்
உள்பட இ.தொ.கா வின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அனர்த்தங்கள் வரலாம்… ஆனால் எமது சிறார்களின் கல்வி பயணம் எப்போதும் தொடர வேண்டும் என்பதே எமது நோக்கம். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எப்போதும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்து;ள்ளார் ஜீவன் தொண்டமான் எம்பீ.

எஸ். ரஜீவன்