பாக். இராணுவம் ஆயுததாரிகள் மோதலில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் 11 பேரும், ஆயுததாரிகள் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆயுததாரிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன்போது பதுங்கி இருந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில், இராணுவத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயுததாரிகள் 19 பேர் கொல்லப்பட்டனர்.

