பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை குழாம் அறிவிப்பு!

பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு 15 பேர்கொண்ட வீரர்கள் குழாமைப் பெயரிட்டுள்ளது. 

இலங்கை ஆண்கள் தேசிய டி20 அணி ஒக்டோபர் 04 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கிப் புறப்படவுள்ளதுடன், அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்தும் பங்கேற்கும் ஒருநாள் முக்கோணத் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. 

டி20 தொடர் ஒக்டோபர் 09, 11 மற்றும் 13 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. ஒருநாள் முக்கோணத் தொடர் ஒக்டோபர் 18 முதல் 31 வரை நடைபெறவுள்ளதுடன், டெஸ்ட் தொடர் நவம்பர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

டி20 குழாம் விபரம்: 

கமில் மிஷார சினேத் ஜயவர்தன குசால் மெண்டிஸ் – தலைவர் லஹிரு உதார சஹான் ஆராச்சிகே கமிந்து மெண்டிஸ் தசுன் ஷானக சமிந்து விக்ரமசிங்க துனித் வெல்லாலகே மஹிஷ் தீக்ஷன விஜயகாந்த் வியாஸ்காந்த் பினுர பெர்னாண்டோ நுவன் துஷார எஷான் மாலிங்க துஷ்மந்த சமீர – உடற்தகுதிக்கு உட்பட்டு

manel