நுவரெலியா மாவட்டத்தில் 150.000 வீடுகள் கட்டப்படவேண்டும்

நுவரெலியா மாவட்டத்தில் 150.000 வீடுகள் கட்டப்படவேண்டும்

நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்பு பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் 150.000 வீடுகள் கட்டப்படவேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி தெரிவிக்கின்றார்.

அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கான கட்டம் கட்டமான நடவடிக்கை எடுப்போம் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன எனவும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார்….

கினிகத்தேன கெனில்வத்த பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இத்தாலி நாட்டு நிதியுதவியில் புனர்நிராமானம் செய்யப்பட்ட வீடுகளை நேற்று (03) மக்கள் பாவனைக்கு கையளித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

இந்த வேலைத்திட்டத்தை இத்தாலி நாட்டின் ஒத்துழைப்போடும் தேசிய மக்கள் சக்தியும் இனைந்து 03மில்லியன் செலவில் முலுமையாக இந்த வீடுகளை புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு கையளித்து இருக்கின்றோம்.

இலங்கை நாட்டில் உள்ள மக்கள் நாட்டினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நாடு முழுவதும் உழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நாட்டு மக்களின் பணத்தை வீண்வீரயம செய்யாத ஊழல் வாதிகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இனங்கண்ட பிறகு இது போன்ற உதவிகளை வெளிநாட்டவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் .

நாட்டின் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்வதற்கு நாட்டின் உருவாகியுள்ள எமது அரசாங்கம் மீது நம்பிக்கையினை வைத்துக்கொண்டு இது போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு இரண்டாம் கட்டமாக இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பத்தாயிரம் வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ள பிரச்சினை ஒன்று காணப்படுகிறது அதற்கான காணியை வழங்குவதில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பிரச்சினை காணப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தில் தோட்டத்தில் தொழில் புரிகின்ற நபருக்கு மாத்திரம் வீடுகளை வழங்க முடியும் அதேபோல் தோட்டத்தில் குறைந்தபட்சம் 05வருடங்கள் தொழில் புரிந்திருந்தால் மாத்திரம் அவருக்கான வீட்டினை வழங்க கூடிய உரிமை உள்ளது.

வரலாற்றில் 5 வருடம் பத்து வருடங்கலாக அமைத்து கொள்ள முடியாத வீடமைப்பு திட்டத்தை நாங்கள் ஒரு வருடத்தில் முன்னெடுத்து வருகிறோம். எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் கடந்த முறையினை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அதனை மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள் எனக்குறிப்பிட்டார்.

எஸ். ரஜீவன்