நிவாரண பகிர்ந்தளிப்பு தொடர்பில் கிராம சேவகர் சங்கம் குற்றச்சாட்டு

நிவாரண பகிர்ந்தளிப்பு தொடர்பில் கிராம சேவகர் சங்கம் குற்றச்சாட்டு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எந்தவொரு சட்டரீதியான அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்று இலங்கை கிராம அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனர்த்தங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது கிராம அலுவலர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக அதன் அமைப்பாளர் சுமித் கோடீகார குறிப்பிட்டார். 

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இந்தச் சமூக அபிவிருத்தி குழு நிறுவப்பட்டமையானது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான விடயங்களுக்காகவே. 

சமூக அபிவிருத்தி குழுவுக்கு அனர்த்தங்கள் சம்பந்தமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என எந்தவொரு சுற்றுநிருபத்திலும் நாங்கள் பார்க்கவில்லை. 

எஸ். ரஜீவன்