தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பங்கேற்பின்மை குறித்து தவிசாளர் அதிருப்தி

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பங்கேற்பின்மை குறித்து தவிசாளர் அதிருப்தி

“பலமான நாடு – நல்லான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி மன்ற வார நிகழ்வுகள் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதேச சபையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சபையில் ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எவரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பங்கேற்காததற்கான காரணத்தை தாம் அறிந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்த தவிசாளர், இது தொடர்பில் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்ற வார நிகழ்வுகளில் பங்கேற்காதமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து உரிய விளக்கம் எதிர்பார்ப்பதாகவும் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

manel