தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்

தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்

டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்; அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் அங்கு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் நடந்தவுடன் பூட்டான் பயணத்தைத் தள்ளிவைக்க எண்ணிய பிரதமர் நேற்று அங்கு விஜயம் மேற்கொண்டார்.

தற்கொலைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கும் சோகத்தில் கனத்த இதயத்துடன் இங்கு வந்திருக்கின்றேன். இந்தத் தாககுதலின் பின்னணியில் இருந்தவர்களைக் கண்டறியவும் முக்கிய மூளைசாளியைக் கண்டுபிடிக்கவும் பாதுகாப்புபப் பிரிவினர் மிகத் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தயங்கமாட்டோம் என்று பிரதமர் அங்கு மேலும் தெரிவித்தார்.

எஸ். ரஜீவன்