தவிசாளர் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி இன்று கந்தப்பளையில் ஆரம்பம்

தவிசாளர் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி இன்று கந்தப்பளையில் ஆரம்பம்

நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில், கந்தப்பளை நகர கொமர்சல் மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பகல்–இரவு தவிசாளர் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பமானது.

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில், கந்தப்பளை மற்றும் நுவரெலியா நகர வர்த்தகர்கள், தவிசாளரின் நண்பர்கள் உள்ளிட்டோரின் அனுசரணையுடன் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலுவான அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் 32 அணிகள் கலந்துகொண்டுள்ளதுடன், போட்டிகள் நொக்-அவுட் முறையில் நடைபெறுகின்றன.

போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளர் K.T. மதுசானிகா மற்றும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு குத்துவிளக்கேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்றது.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடைபெற்ற முதலாவது நட்புரீதியான போட்டியில் கந்தப்பளை யங்ஸ்டார் மற்றும் கந்தப்பளை நைட்ரைடர் அணிகள் மோதின. இதில் கந்தப்பளை நைட்ரைடர் அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்தும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் என மூன்று நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel