ஜப்பான் தூதுவர் சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு: பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் வரவேற்பு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா, சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அகிடோ இசமாதோ (Akito Isomato) இன்று (18.09.2026) மாலை 3.00 மணியளவில் வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
ஆலயத்திற்கு வருகை தந்த ஜப்பான் தூதுவரை, சீதையம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி மிக சிறப்பான முறையில் வரவேற்றார்.
தனைத் தொடர்ந்து, ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஜப்பான் தூதுவர் பக்திப்பூர்வமாக கலந்துகொண்டார். நிகழ்வின் நிறைவில், ஆலயத்தின் சார்பில் அவருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றை ஆலயத்தின் உப பொருளாளர் ஆர். குணசேகரன் வழங்கி கௌரவித்தார்.
மேலும், ஆலயத்தின் விசேட விருந்தினர்களுக்கான பிரமுகர் பதிவேட்டில் ஜப்பான் தூதுவர் தனது வருகை குறித்த பதிவைப் பொறித்ததுடன், ஆலய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளின் பார்வையிழைப்பிற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள முப்பரிமாண (3D) புஷ்பக விமானக் காட்சியினையும் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

