சவூதியில் இலங்கை வாலிபருக்கு மரண தண்டனை: இரத்து செய்யக் கோரி வெளிவிவகார அமைச்சரிடம் அவசர முறையீடு!

சவூதியில் இலங்கை வாலிபருக்கு மரண தண்டனை: இரத்து செய்யக் கோரி வெளிவிவகார அமைச்சரிடம் அவசர முறையீடு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் தண்டனையை இரத்து செய்யக் கோரி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் (BSc Hons, MBA), அமைச்சரை இன்று (18) காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சவூதியில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு விசாரணையின் முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டின் பிரஜையின் உயிர் சார்ந்த மனிதாபிமான பிரச்சினை என்பதால், இதில் காலதாமதமின்றி தலையிட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, வழக்கின் முழுமையான சட்ட நிலைமையை ஆராய்ந்து அனோஜனுக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகளை இலங்கை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து, சவூதி அதிகாரிகளுடன் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி தண்டனையை இரத்து செய்ய அல்லது குறைக்க விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

manel