சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு சிறுநீரகப் பாதிப்பு!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இணையவழியாக கொள்வனவு செய்யப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றைப் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு பாரதூரமான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிரீமை ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிகமான பாதரசம் (Mercury) காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, குறித்த சிறுமி சுமார் ஒரு வருடமாக இந்தக் கிரீமைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
பாதரசம் கலந்த சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, குறிப்பாக இணையவழியில் விற்பனை செய்யப்படும், உரிய மூலப்பொருள் விபரங்கள் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்கள் இல்லாத கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

