சந்தேக நபர்கள் நிதிக் குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
கொலை தொடர்பாக நேற்று (26) காலை கெகிராவ பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த நேரத்தில் தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபர், விசேட விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் குழு இணைந்து மஹரகமவின் நாவின்ன பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.

