குளியாப்பிட்டி சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை
குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று (29) பகல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரின் இந்த நடவடிக்கையை அடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் அதற்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் மீது பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு, அதற்கமைய சந்தேகநபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

