ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சை ஜனவரி முதல் வாரத்தில்!

ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சை ஜனவரி முதல் வாரத்தில்!

ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சை ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள க. பொ. த உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதியை 2026 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திட்டமிட்;டபடி எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவேவ அறிவித்துள்ளார் என்று கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனர்த்தம் நிகழாத பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்வியியற் கல்லுரிகள், தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் எதிர்வரும் டிசம்பர் எட்டாம் திகதி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ள திரு. களுவெவ, யாதேனும் நடைமுறைச் சிக்கல்கள் எதிர்நோக்கப்படால், கல்லூரிகளை மீள ஆரம்பிப்பது பற்றிய தீர்மானத்தை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எஸ். ரஜீவன்