இலங்கை – சீன வர்த்தகத்தை யுவானில் மேற்கொள்ள கொழும்பில் ஆய்வு

இலங்கை – சீன வர்த்தகத்தை யுவானில் மேற்கொள்ள கொழும்பில் ஆய்வு

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில், RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. 

சீனத் தூதுவர் ஷி ஷெங் ஹொங், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, மற்றும் அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்ட பல பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர். 

இலங்கையில் உள்ள சீன வர்த்தகக் கவுன்சில் ஏற்பாடு செய்து, சீன வங்கியின் கொழும்பு கிளை ஆதரவுடன் ‘2025 RMB சர்வதேச மயமாக்கல் மன்றம்’ அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இலங்கையின் சீனத் தூதுவர் ஷி ஷென்க் ஹொன்க், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர். 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்குச் சீனாவின் RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் இதில் வலியுறுத்தப்பட்டது.

எஸ். ரஜீவன்