இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

புனிதமிக்க ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தியாகம், பொறுமை, சமத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பறைசாற்றும் உன்னதமான இத் திரு நாளில், மகிழ்ச்சியையும் வாழ்வாதாரங்களையும் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு, பின்தங்கியுள்ள சக சகோதரர்களின் வாழ்வை உயர்த்துவதற்கு உறுதியேற்போம்.

நமது நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புதியதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒருவரையொருவர் மதித்து, பரஸ்பர அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வது அவசியமாகும்.

அத்துடன் இப்புனித நாளில் உலகெங்கும் அமைதியும், நிம்மதியும், எமது தாய்நாட்டில் நிலையான அபிவிருத்தியும், பல்லின மக்களுக்கிடையிலான சகவாழ்வும் தழைத்தோங்க வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!

ஈத் முபாரக்!

manel