இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் ஒருவர் பலி!

இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் ஒருவர் பலி!

யாழ் நயினாதீவில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணகுமார் ஐயா

நாவலப்பிட்டியை சேர்ந்த 44 வயதான M.கிருஷ்ணகுமார் ஐயா தொழில் நிமிர்த்தம் யாழ் நயினாதீவுக்கு சென்று தங்கியிருந்த வேளை யாழ் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய குருக்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

ஒரு ஆண் பிள்ளையின் தந்தையான M. கிருஷ்ணகுமார் ஐயா சிறந்த சமய குருவாக இறைபணியாற்றி வந்ததுடன் எதிர்பாராத விதமாக இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்

இக் கொலையினை புரிந்தவர் நுவரெலியா பகுதியை சேர்ந்த 36 வயதான மதகுரு ஒருவரார் இவரும் கொலையுண்ட கிருஷ்ணகுமார் ஐயாவும் நயினாதீவில் தங்கியிருந்து இரு வெவ்வேறு ஆலயங்களில் பூசை புரிந்து வந்துள்ள நிலையில் அவர்களுக்கிடையிலான கருத்து மோதல் கத்தி மோதலாக மாறி இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலையினை புரிந்த நுவரெலியா பகுதியைச் சேர்ந்த குருக்கள் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

manel