அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசியை பதுக்கி வைப்பதாகவும் அதன் பிரதிபலனாக சந்தையில் அரிசி தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், கீரி சம்பாவுக்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதனூடாக வேறு மாப்பியா நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்று அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய சந்தையில் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் நடவடிக்கையினூடாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கீரி சம்பா அரிசியை பதுக்குவதாகவும் அதனால் சந்தையில் அரிசித் தட்டுப்பாடு தோற்றம் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஸ். ரஜீவன்