ஃபீல்டிங்கிலும் அசத்தும் ரோகித்: 2026-ல் புதிய சாதனை!

ஃபீல்டிங்கிலும் அசத்தும் ரோகித்: 2026-ல் புதிய சாதனை!

2026ஆம் ஆண்டில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக கேட்ச்களைப் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

நேற்று (13) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், ஃபின் அலனின் கேட்ச்சைப் பிடித்ததன் மூலம் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் தனது கேட்ச்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தினார்.

இதன் மூலம், 2018ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 11 கேட்ச்களைப் பிடித்திருந்த தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

2026ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர்களின் உலகளாவிய பட்டியலில் லிட்டன் தாஸ் 17 கேட்ச்களுடன் முதலிடத்திலும், ஜோஷ் இங்கிலிஸ் 14 கேட்ச்களுடன் இரண்டாமிடத்திலும், ரோகித் சர்மா 12 கேட்ச்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்திய வீரர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel